Posts

Showing posts from July, 2018

Thulavur Adheenam

Image
அருள்மிகு நிரம்ப அழகிய  தேசிக ஸ்வாமிகள் ஞான   நூல்தன்னை   ஓதல்   ஓதுவித்தல் நற்பொருளயைக்   கேட்பித்தல்   தான்கேட்டல்    நன்றா ஈனமில்லாப்   பொருள்தன்னைச்   சிந்தித்தல்   ஐந்தும் இறைவனடி   அடைவிக்கும்   எழில்   ஞான   பூசை . என்று   ஞான   நூல்   கூறுகின்றன .  இச் சீரிய   வழிபாட்டை   இடையறாது   செய்துவரும்   ஞானநிலையங்களே   திருமடங்களாகும் . தமிழகச்    சைவாதீனங்கள் பதினெட்டில்  ஒன்றுதாம்   குன்றக்குடி அருகிலுள்ள துலாவூரில் அமைந்துள்ள அருள்மிகு நிரம்ப அழகிய தேசிக ஸ்மாமிகள் ஆதீனப் பெருமடமாகும். இத்திருமடத்தில் 29-வது குருமகா சன்னிதானமாக எழுந்தரியருளிருப்பவர்கள் சீலத்திரு நிரம்ப அழகிய ஞானப்பிரகாச தேசிக ஸ்வாமிகள் அவர்கள் ஆவார்கள். நகரத்தார் இனத்தவர்க்களுக்கு சிவதீட்சை வழங்கி அருளுபதேசம் செய்துவரும் கடப்பாடுடைவர்கள் .